அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏ.ஐ. இலவச 5 நாள் பயிற்சி.. நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்!

Free AI Training: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏ.ஐ. குறித்த இலவச 5 நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன; இதற்கு, நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

Published on: November 16, 2026 at 12:31 pm

சென்னை, நவ.16, 2026: அண்ணா பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இணையப் பாதுகாப்பு தொடர்பான 5 நாள் குறுகிய காலப் பயிற்சி வகுப்பு டிசம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது. வளர்ந்து வரும் இணையப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) தகவல் பாதுகாப்புக் கல்வி மற்றும் விழிப்புணர்வு (ISEA) திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் இணையப் பாதுகாப்பின் அடிப்படைகள், குறியாக்கவியல், நெட்வொர்க் பாதுகாப்பு, இணையதளப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மூலம் இணைய அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், மால்வேர் பகுப்பாய்வு உள்ளிட்ட 12 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும். நிபுணர்களின் வகுப்புகள் மற்றும் நேரடி செய்முறைப் பயிற்சிகளும் இடம்பெறும்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினர் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் https://isea.app/event.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதையும் படிங்க : சிறப்பு TNTET தேர்வுக்கு புதிய பணிச்சான்றிதழ் கட்டாயம்.. நவ.19 கடைசி நாள்!

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
National Banana Research Institute

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com