சென்னையில் ஏ.ஐ. மூலம் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி.. அண்ணா நகரில் விரைவில் சோதனைத் திட்டம்

Chennai Smart Parking: சென்னையில் ஏ.ஐ. மூலம் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி வரவுள்ளது; அண்ணா நகரில் விரைவில் சோதனைத் திட்டம் நடத்தப்படவுள்ளது.

Published on: November 16, 2026 at 12:16 pm

சென்னை, நவ.16, 2026: சென்னையில் வாகன நிறுத்துமிடங்களைச் சீரமைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தைச் செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதல்கட்டமாக அண்ணா நகரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் மூலம் வாகன நிறுத்துமிடங்கள் கண்காணிக்கப்படும். காலியாக உள்ள இடங்கள், வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் கண்டறிவதுடன், விதிமீறல்களையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தானாகக் கண்டறியும்.

நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது, நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்துவது, இரட்டை வரிசையில் நிறுத்துவது உள்ளிட்ட 6 வகையான விதிமீறல்களைக் கண்டறிய இந்த மென்பொருள் வடிவமைக்கப்படுகிறது. இதற்காக 2,100 கார் நிறுத்தும் இடங்களுக்கு இணையான பார்க்கிங் வசதிகள் திட்டத்தில் இடம்பெறுகின்றன. இதற்கென தனி மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அண்ணா நகரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, அடையாறு, தி.நகர், வேளச்சேரி, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர் உள்ளிட்ட சென்னையின் 20 இடங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டதும், 3 மாதங்களுக்குள் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க :வாட்ஸ்அப் உங்கள் தனிப்பட்ட தகவல்களை விற்கிறதா? என்னென்ன விவரங்களைச் சேகரிக்கிறது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com