Arivu Film Selection: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது ‘அறிவு’ திரைப்படம்.
Arivu Film Selection: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது ‘அறிவு’ திரைப்படம்.

Published on: November 16, 2026 at 12:05 pm
Updated on: November 16, 2026 at 12:06 pm
சென்னை, நவ.16, 2026: ‘உறியடி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெற உள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) திரையிடத் தேர்வாகியுள்ளது. இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெறும் ‘நியூ ஹாரிசன்ஸ்’ (New Horizons) பிரிவில் திரையிடப்பட உள்ளது. இதில் விஜய்குமாருடன் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஐ.எம்.விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சாய் வினோத் ஜெயக்குமார் தயாரித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்நிலையில், ‘அறிவு’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : அழகுக்காக செய்த மாற்றங்களை மறைக்க விரும்பவில்லை – நடிகை ஸ்ருதி ஹாசன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com