சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு.. தேவசம்போர்டு திட்டம்

Sabarimala Devotees Insurance: சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு வழங்கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Published on: November 14, 2026 at 12:08 pm

சபரிமலை, நவ.14, 2026: சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு வழங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் (LIC) இணைந்து புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமின்றி, ஸ்பாட் புக்கிங் முறையில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு தரப்பு பக்தர்களும் காப்பீட்டு வசதியைப் பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, காப்பீட்டுக்காக பக்தர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை தேவசம் போர்டே முழுமையாக ஏற்க உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.1.5 கோடி பிரீமியம் தொகை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன்களின்போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். அவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யும் வகையில் தேவசம் போர்டு இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதையும் படிங்க : சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.. இதன் பொருள் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com