How to make Kerala Style Nendram Chips | கேரள ஸ்டைலில் நேந்திரம் சிப்ஸ் தயாரிப்பது எப்படி என்பது தெரியுமா?
How to make Kerala Style Nendram Chips | கேரள ஸ்டைலில் நேந்திரம் சிப்ஸ் தயாரிப்பது எப்படி என்பது தெரியுமா?
Published on: September 29, 2024 at 3:10 pm
How to make Kerala Style Nendram Chips | தேங்காய் எண்ணெய் வாசத்தில் கேரள ஸ்டைலில் எளிதாக நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம். முதலில் தேவையான பொருள்களை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
நேந்திரம் வாழைக்காய்-4
உப்பு – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
தண்ணீர் -1 டம்ளர்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 300ml தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நேந்திர வாழைக்காயை தோல் சீவி எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் நேந்திர வாழை காயை வட்ட வட்டமாக சிப்ஸ் போன்று சீவி போட வேண்டும். பின்னர் தயார் செய்து வைத்த மஞ்சள், உப்பு கலந்த தண்ணீரில் 10 முதல் 15 ஸ்பூன் பொரிந்து கொண்டிருக்கும் சிப்ஸ் மீது சேர்த்து கிளறி விட வேண்டும்.
சிப்ஸ் நன்கு பொரிந்து மஞ்சள் நிறமாக மாறி உப்பி வந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்ற வேண்டும். இதேபோன்று மீதமுள்ள நேந்திர வாழை காயினை தயார் செய்து பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிப்ஸ் சூடு ஆறியதும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும். இப்போது மொறு மொறுப்பான கேரள ஸ்பெஷல் நேந்திர வாழைக்காய் சிப்ஸ் தயார். இது டீ, காபி உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : இதோ ஏழே நிமிடத்தில் லெக் பீஸ் ரெடி: செஃப் தாமு ஸ்டைலில் இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com