Deepika Raja: “முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்” என மொத ராத்திரி பட நடிகை தீபிகா ராஜா தெரிவித்துள்ளார்.
Deepika Raja: “முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்” என மொத ராத்திரி பட நடிகை தீபிகா ராஜா தெரிவித்துள்ளார்.

Published on: November 5, 2026 at 3:40 pm
சென்னை, நவ.5, 2026: தமிழில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெற்றிபெறும் திரைப்படங்களின் வரிசையில் ‘மொத ராத்திரி’ திரைப்படமும் இணைந்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியுள்ளது. இதில் ‘திருப்பூர் காரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா ராஜாவின் நடிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இந்நிலையில், நடிகை தீபிகா ராஜா, தனது திரைப்பயணம் மற்றும் ‘மொத ராத்திரி’ பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘திருப்பூர் காரி’ கதாபாத்திரம் தனக்குப் புதிய அடையாளத்தையும், அதிகமான வாய்ப்புகளையும் தந்துள்ளதாகவும், ரசிகர்கள் கதாபாத்திரத்தின் பெயரை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த தீபிகா, நடிப்புக்கு வருவதற்கு முன்பு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் குறும்படங்கள் மூலம் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய அவர், மலையாளத் திரைப்படங்களிலும் நடித்த அனுபவம் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் வெப் தொடர்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வளர்ந்து வருவது புதிய நடிகர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறினார்.
தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க விரும்பினாலும், ‘திருப்பூர் காரி’ போன்ற அழுத்தமான கதாபாத்திரங்களையும் நிராகரிக்க மாட்டேன் எனத் தீபிகா தெரிவித்துள்ளார். ஒரே மாதிரியான கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து முத்திரை குத்தப்படுவதைத் தவிர்க்க, தற்போது வரும் பட வாய்ப்புகளை கவனமாகத் தேர்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ரூ.816 கோடியைத் தாண்டிய ‘ஜெயிலர் 2’ வசூல்.. 20 நாட்களில் புதிய சாதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com