அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர் யார் யார்?

US Midterm Elections: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

Published on: November 5, 2026 at 1:12 pm

வாஷிங்டன், நவ.15, 2026: அமெரிக்காவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளதுடன், மேரிலாந்து மாகாண துணை ஆளுநர் அருணா மில்லரும் மீண்டும் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துள்ளார்.

கலிபோர்னியாவின் 3ஆவது தொகுதியில் அமி பெரா மீண்டும் வெற்றி பெற்று எட்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். விர்ஜீனியாவின் 10ஆவது தொகுதியில் சுஹாஸ் சுப்ரமணியம் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கலிபோர்னியாவின் 17ஆவது தொகுதியில் ரோ கண்ணாவும், வாஷிங்டனின் 7ஆவது தொகுதியில் பிரமிளா ஜெயபாலும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, புளோரிடாவின் 22ஆவது தொகுதியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பியா தண்டியா வெற்றி பெற்று முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளார். முன்னாள் ஆசிரியரும் பள்ளி முதல்வருமான இவர், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர். மேலும், மேரிலாந்து துணை ஆளுநர் அருணா மில்லர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இதனிடையே, ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமி தோல்வியடைந்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேலும் சிலர் மாகாண சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போட்டியிட்ட நிலையில், அவர்களின் தேர்தல் முடிவுகள் சில அறிவிக்கப்படாமல் இருந்தன.

இதையும் படிங்க : உக்ரைனில் நிவாரண உதவி மையம் மீது ரஷ்யா தாக்குதல்.. பலி 31 ஆக உயர்வு!

விமானத்தில் சக விமானி தாக்குதல்.. உயிரைப் பணயம் வைத்து 170 பேரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரகம் விருது!
Indian Pilot Honoured by UAE

விமானத்தில் சக விமானி தாக்குதல்.. உயிரைப் பணயம் வைத்து 170 பேரைக் காப்பாற்றிய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com