Velavan Senthilkumar Czech Open Title: செக் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார்.
Velavan Senthilkumar Czech Open Title: செக் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார்.

Published on: November 4, 2026 at 2:28 pm
பர்னோ, நவ.4, 2026: செக் குடியரசின் பர்னோ நகரில் நடைபெற்ற செக் ஓபன் 2026 ஸ்குவாஷ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்தின் கிரெக் லோபனை அவர் எதிர்கொண்டார்.
உலகத் தரவரிசையில் 42-வது இடத்திலும், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்திலும் உள்ள வேலவன், முதல் நிலை வீரரான லோபனை 13-11, 11-5, 8-11, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் வேலவன் செந்தில்குமார் தனது தொழில்முறை ஸ்குவாஷ் சுற்றுப்போட்டிகளில் 12-வது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புடாபெஸ்ட் ஓபன் தொடருக்குப் பிறகு, தனது இரண்டாவது பிஎஸ்ஏ காப்பர் நிலை பட்டத்தையும் வென்றுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வேலவன் செந்தில்குமார் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார். ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும், இந்திய ஆண்கள் அணியிலும் அவர் வெண்கலப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை.. 14 பந்துகளில் அரைசதம் அடித்த பிரேமா ராவத்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com