மகளிருக்கு ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள்.. முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

CM Vijay: ஈரோட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

Published on: November 3, 2026 at 2:56 pm

ஈரோடு, நவ.3, 2026: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மகளிர் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று (நவம்பர் 3) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்குப் புறப்பட்டுச் சென்றார். பெருந்துறையில் கருமாண்டிசெல்லிபாளையம் பாலம் அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா மகாலில் காலை 11.45 மணிக்கு மகளிர் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படன.

இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,110 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிரின் பொருளாதார முன்னேற்றம், சுயதொழில் தொடங்குதல் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி அரங்குகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார். மகளிர் தொழில்முனைவோரின் உற்பத்திப் பொருட்கள், சிறு தொழில் முயற்சிகள் மற்றும் அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவை முதல் பெருந்துறை வரையிலும், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 4,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், புதிய பேருந்து நிலையம், உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில்.. தனியார் பார்களுக்கு புதிய விதிகள்!

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 சிறப்பு நீதிமன்றங்கள்.. முதல்வர் விஜய் உத்தரவு!
30 Special Courts Ordered

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 சிறப்பு நீதிமன்றங்கள்.. முதல்வர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com