ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Glenn Maxwell Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்.

Published on: November 3, 2026 at 1:27 pm

சிட்னி, நவ.3, 2026: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான அவர், 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டிலேயே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த மேக்ஸ்வெல், தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட், 149 ஒருநாள் மற்றும் 130 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், மொத்தம் 7,226 ரன்களும், 136 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 2015, 2023ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கோப்பையையும், 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையையும் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார்.

குறிப்பாக, 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறச் செய்தது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத சாதனையாக அமைந்தது. சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், மெல்போர்ன் ஸ்டார்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காகத் தொடர்ந்து டி20 லீக் போட்டிகளில் விளையாட உள்ளார்.

இதையும் படிங்க : பி.வி சிந்து, லக்‌ஷயா சென் ஐரோப்பியத் தொடர்.. நிதியுதவியை நிறுத்திய இந்திய விளையாட்டு ஆணையம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com