Gold Prices Fall: தங்கத்தின் விலை 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது.
Gold Prices Fall: தங்கத்தின் விலை 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது.

Published on: November 1, 2026 at 8:17 pm
புதுடெல்லி, நவ.1, 2026: இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. டெல்லியில் 99.9 சதவீதம் தூய்மையான 10 கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.3,200 குறைந்து, ரூ.1 லட்சத்து 42 ஆயிரமாக விற்பனையானது. இந்நிலையில், கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை சரிந்துள்ளதாக அகில இந்திய சராஃபா சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 10 கிராம் தங்கம் ரூ.1,45,200-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை ரூ.1,42,000 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலையும் ரூ.4,200 குறைந்து ரூ.1,86,000 ஆக விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தங்கம், வெள்ளி விலை சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரிக்கும் பணவீக்க அச்சம் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கடுமையான வட்டி விகித நிலைப்பாடு ஆகியவை விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மேலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும், சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் முதலீட்டாளர்களின் விற்பனையை அதிகரித்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்துள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எப்படி? நவம்பர் 1ஆம் தேதி விலை நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com