பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

Pa. Ranjith: பொங்கல் 2027-ல் வெளியாகிறது பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம்.

Published on: November 1, 2026 at 8:03 pm

சென்னை, நவ.1, 2026: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு புதிய போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

ஆர்யா, வி.ஆர்.தினேஷ், ஷபீர் கல்லாரக்கல், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பல்வேறு குழுக்களுக்கு இடையே நடைபெறும் மோதல்களை மையமாகக் கொண்டு, அழிவின் விளிம்பில் இருக்கும் உலகின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் தமிழர்களின் பாரம்பரியத் தற்காப்புக் கலையான அடிமுறை மற்றும் மல்லகம்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதற்காக நடிகர்கள் சிறப்புப் பயிற்சியும் மேற்கொண்டுள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : நரிக்குறவர் மக்களின் வாழ்வுரிமை, சுயமரியாதையைப் பேசும் ‘சிங்காரம்மா’.. யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பு!

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!
Sai Pallavi

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!

நரிக்குறவர் மக்களின் வாழ்வுரிமை, சுயமரியாதையைப் பேசும் ‘சிங்காரம்மா’.. யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பு!
Yogi Babu

நரிக்குறவர் மக்களின் வாழ்வுரிமை, சுயமரியாதையைப் பேசும் ‘சிங்காரம்மா’.. யோகிபாபுவின் மாறுபட்ட நடிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com