ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் நயன்தாரா.. பரபரப்பு தகவல்கள்!

Nayanthara in Dharman: ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் இணைந்துள்ளார் நயன்தாரா. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: October 27, 2026 at 3:36 pm

சென்னை, அக்.27, 2026: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். நயன்தாரா இணைந்ததை அறிவிக்கும் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்தும் நயன்தாராவும் ஏற்கெனவே ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘குசேலன்’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே வெளியான முதல் பார்வை போஸ்டரில், அறுவை சிகிச்சை அரங்கில் மருத்துவர் உடையில் ரஜினிகாந்த் இடம்பெற்றிருந்தார். இருப்பினும், நயன்தாரா ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : போலீசாக நடிக்கும் சாய் பல்லவி.. கதாபாத்திரத்தின் பெயர் நித்யா ரெட்டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com