Love Bite Shooting Wraps Up: சந்தானத்தின் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.
Love Bite Shooting Wraps Up: சந்தானத்தின் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

Published on: October 26, 2026 at 11:23 am
சென்னை, அக்.26, 2026: நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் சந்தானம் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். மேலும், படப்பிடிப்பின் பின்னணிக் காட்சிகள் அடங்கிய வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இப்படத்தை இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘லவ் பைட்’ திரைப்படத்தில் நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் தலைப்புப் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் அடிப்படையில், இப்படம் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என சந்தானம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்.. தமிழ் ஹீரோக்கள் அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com