Cyclone Alert: தமிழகத்தை நோக்கி உருவாகும் புயலுக்கு ‘முரசு’ என்ற பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளது.
Cyclone Alert: தமிழகத்தை நோக்கி உருவாகும் புயலுக்கு ‘முரசு’ என்ற பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளது.

Published on: October 22, 2026 at 1:57 pm
சென்னை, அக்.22, 2026: வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ள அடுத்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்துள்ள ‘முரசு’ என்ற தமிழ்ப் பெயர் சூட்டப்பட உள்ளது. அக்டோபர் 23-ம் தேதி உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால், இந்தப் பெயர் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல்களுக்கு பெயரிடும் நடைமுறை 2004-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களை எளிதில் அடையாளம் காணவும், முன்னெச்சரிக்கைத் தகவல்களை மக்களிடம் தெளிவாகக் கொண்டு சேர்க்கவும் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவுடன் வங்கதேசம், ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய 12 நாடுகளும் இணைந்து புயல்களுக்கான பெயர்களைப் பரிந்துரைக்கின்றன. பெயர்கள் சுருக்கமாகவும், உச்சரிக்க எளிதாகவும், அதிகபட்சம் 8 எழுத்துகளுக்குள்ளும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேலும், அக்டோபர் 23-ம் தேதி வங்கக்கடலின் மற்றொரு பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறுமா என்பது அடுத்தடுத்த வானிலை நிலவரங்களைப் பொறுத்தது.
இதையும் படிங்க : சி.ஜே.பி எழுப்பும் கேள்விகள் நியாயமானவை.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com