Maharashtra | மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவ.26ஆம் தேதிக்கு முன் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.
Maharashtra | மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவ.26ஆம் தேதிக்கு முன் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.
Published on: September 28, 2024 at 8:02 pm
Updated on: September 28, 2024 at 8:09 pm
Maharashtra | மகாராஷ்டிராவில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 26ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) ராஜீவ் குமார் இன்று (செப். 28, 2024) தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தீபாவளி போன்ற பண்டிகைகளை மனதில் வைத்து தேர்தல் தேதிகளை அறிவிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், “தேர்தல் தேதிகளை அறிவிக்கும் போது அனைத்து அரசியல் கட்சிகளும் வரவிருக்கும் பண்டிகைகளை கருத்தில் கொள்ளுமாறு எங்களிடம் கேட்டுள்ளன.
ஜனநாயகத்தின் திருவிழாவிற்கு மகாராஷ்டிரா தீவிரமாக பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார். இதையடுத்து, “தினசரி ஊதியம் பெறுவோர் மற்றும் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் வாக்களிக்கும் நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், “”எங்கள் இலக்கு அதிகபட்ச வாக்காளர் பதிவு மற்றும் இந்தத் தேர்தல்களில் பங்கேற்பதை உறுதி செய்வதாகும்” என்றார்.
இதையும் படிங்க : நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com