Then Kudikka Song Controversy: ‘தேன் குடிக்க’ பாடல் விவகாரத்தில், நடிகர் மீது பாடகி பிரகதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Then Kudikka Song Controversy: ‘தேன் குடிக்க’ பாடல் விவகாரத்தில், நடிகர் மீது பாடகி பிரகதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: October 21, 2026 at 12:55 pm
சென்னை, அக்.21, 2026: பின்னணிப் பாடகி பிரகதி குருபிரசாத், நடிகரும் பாடகருமான டீஜே அருணாசலத்தின் மீது வருவாயைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், பாடலுக்கான உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ‘தேன் குடிக்க’ மற்றும் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘நஹிலா நஹிலா’ ஆகிய பாடல்கள் தொடர்பாக இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிரகதி, பாடல்களின் ராயல்டி வருவாயைப் பகிர்ந்து கொள்வதாக டீஜே உறுதியளித்ததாகவும், ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர் ஸ்டீவ் கிளிஃப் மற்றும் தனக்கு இந்தப் பாடல்கள் மூலம் எந்த வருவாயும் கிடைக்கவில்லை என்றும், தனது அனுமதியின்றி முடிக்கப்படாத பாடல் வடிவம் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னரே ‘தேன் குடிக்க’ பாடலில் தனது பெயர் இடம்பெற்றதாகவும், தயாரிப்பாளர் ஸ்டீவ் கிளிஃப் பெயர் இன்னும் இசைத் தளங்களில் இடம்பெறவில்லை என்றும் பிரகதி தெரிவித்துள்ளார். தற்போது ‘தேன் குடிக்க 2’ பாடலை வெளியிட டீஜே தயாராகி வரும் நிலையில், பழைய விவகாரத்துக்கு தீர்வு காணப்படாததால் தனது அனுபவத்தைப் பொதுவெளியில் பகிர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ரன்வீர்- தீபிகா இரண்டாவது மகள் பெயர் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com