Fish Price Hike : சென்னை காசிமேட்டில் மீன் விலை உயர்வு கண்டுள்ளது.
Fish Price Hike : சென்னை காசிமேட்டில் மீன் விலை உயர்வு கண்டுள்ளது.

Published on: October 21, 2026 at 10:40 am
சென்னை, அக்.21, 2026: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) மீன்களின் விலை உயர்ந்தது. புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி தொடங்கியதால் மீன் விற்பனை அதிகரிக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்ததால் சந்தைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
காசிமேடு சந்தைக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மக்கள் வந்து மீன்களை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் வரவில்லை. கடலுக்குச் சென்று திரும்பிய மீனவர்களுக்கும் சிறிய வகை மீன்களே அதிகமாகக் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, சென்னை விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் கவுரவத் தலைவர் கபிலன் கூறுகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பலர் அசைவ உணவுகளைத் தவிர்த்ததால் வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததாகத் தெரிவித்தார். இருப்பினும், அக்டோபர் 11-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் மீன்களின் விலை உயர்ந்திருப்பது மீனவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அன்றைய சந்தையில் 18 கிலோ கொண்ட ஒரு கூடை சங்கரா மற்றும் பாறை மீன்கள் தலா ரூ.5,000-க்கும், இறால் ரூ.4,000-க்கும், கணவா ரூ.5,000-க்கும் விற்பனையானது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.800-க்கும், கல் இறால் கிலோ ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) சந்தைக்கு அதிகளவில் மக்கள் வருவார்கள் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.5 லட்சம் FD முதலீடு.. மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு வட்டி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com