உள்ளாட்சி முதல் 2029 மக்களவை வரை.. த.வெ.க, IUML கூட்டணி தொடரும்.. அமைச்சர் ஷாஜகான்!

TVK–IUML Alliance: உள்ளாட்சித் தேர்தல் முதல் 2029 மக்களவைத் தேர்தல் வரை தவெக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

Published on: October 20, 2026 at 11:48 am

தென்காசி, அக்.20, 2026: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலிலும் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் தொடர்வது எனக் கட்சியின் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், அதிமுகவின் முன்னாள் கோட்டைகளாகக் கருதப்பட்ட தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணையத் தயாராகி வருவதாகவும் ஷாஜஹான் தெரிவித்தார்.

நீண்டகாலமாகச் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுவிப்பது, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்களிலும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளுக்கு பரோல்: தமிழக அரசுக்கு பாஜக கண்டனம்

மதம் மாறிய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம்.. அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!
Muslim Reservation Protection

மதம் மாறிய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம்.. அமைச்சர் நிர்மல் குமார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com