Thanjavur Temple Crowd: தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Thanjavur Temple Crowd: தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Published on: October 19, 2026 at 3:47 pm
தஞ்சாவூர், அக்.19, 2026: தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பெரிய கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலில், பெருவுடையாரை வழிபட்டு பக்தர்கள் அருள் பெற்றுச் செல்கின்றனர்.
சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜ சோழனால் 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், தமிழர்களின் கட்டடக் கலைத் திறமைக்கும் வரலாற்றுப் பெருமைக்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது. பிரம்மாண்டமான விமானம், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி சிலை மற்றும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கோயிலின் தனிச்சிறப்புகளாக உள்ளன. யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கோயில், ஆன்மிகத் தலமாக மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் அதிகளவில் ஈர்த்து வருகிறது.
கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக பெரியநாயகி அம்மனுக்கு கஜலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதைக் காணவும், அம்மனின் அருளைப் பெறவும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
Thanjavur, Tamil Nadu: A large number of devotees visit the Brihadeeswara Temple to seek blessings. pic.twitter.com/oyP1tsDT97
— IANS (@ians_india) October 18, 2026
இதையும் படிங்க : 2026 ஆயுத பூஜை சிறப்பு ரயில்.. சென்னை – காரைக்குடி இடையே இயக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com