சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. அக்.19, 20 முழு அட்டவணை!

Chennai Metro Schedule Oct 19–20: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்.19 மற்றும் அக்.20 ஆகிய 2 நாட்களுக்கு அட்டவணையை பார்க்கலாம்.

Published on: October 19, 2026 at 12:05 pm

சென்னை, அக்.19, 2026: சென்னையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, அக்டோபர் 19, திங்கட்கிழமை மற்றும் அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடத்தில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தொடங்கப்பட்ட மஞ்சள் வழித்தடத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் நாள் முழுவதும் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்பதால், பயணிகள் இந்த மாற்றியமைக்கப்பட்ட கால அட்டவணைக்கு ஏற்ப தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட்!

மதம் மாறிய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம்.. அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!
Muslim Reservation Protection

மதம் மாறிய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம்.. அமைச்சர் நிர்மல் குமார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com