Chennai Rain Alert: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Chennai Rain Alert: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published on: October 19, 2026 at 11:40 am
சென்னை, அக்.19, 2026: சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் 24 மணி நேரத்துக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை என்பது 20 செ.மீட்டருக்கும் அதிகமான மிக கனமழைக்கான முன்னறிவிப்பைக் குறிக்கிறது.
இதற்கிடையில், சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ. மழையும், கத்திவாக்கத்தில் 34 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி, நகரின் 22 சுரங்கப்பாதைகளிலும் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குள் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஆயுதப் பூஜை 2026: சென்னையில் இருந்து 2.62 லட்சம் பேர் பயணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com