2025 நிதியாண்டில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு லாட்டரி நிறுவனம் நன்கொடை.. எவ்வளவு தெரியுமா?

Political Donations Controversy: மார்ட்டின் தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து திமுக, அதிமுகவுக்கு ரூ.260 கோடி நன்கொடை பெற்றுள்ளன.

Published on: October 17, 2026 at 8:33 pm

சென்னை, அக்.17, 2026: லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினுடன் தொடர்புடைய கொல்கத்தாவைச் சேர்ந்த டைகர் அசோசியேட்ஸ் நிறுவனம், 2025–26 நிதியாண்டில் திமுக மற்றும் அதிமுகவுக்கு மொத்தம் ரூ.260 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் தாக்கல் செய்துள்ள நன்கொடை விவரங்களில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

இதில், அதிமுகவுக்கு ரூ.135 கோடியும், திமுகவுக்கு ரூ.125 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு ஆறு தவணைகளிலும், திமுகவுக்கு 14 தவணைகளிலும் இந்த நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அறிவித்த மொத்த நன்கொடையான ரூ.161.36 கோடியில், டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்கு சுமார் 84 சதவீதமாகும். அதேபோல், திமுக அறிவித்த ரூ.191.19 கோடி மொத்த நன்கொடையில் இந்நிறுவனத்தின் பங்கு சுமார் 65.4 சதவீதமாக உள்ளது.

2024–25 நிதியாண்டில் இரு கட்சிகளுக்கும் சேர்த்து ரூ.110 கோடி வழங்கிய இந்நிறுவனம், அடுத்த நிதியாண்டில் ரூ.260 கோடி வழங்கியுள்ளது. இதன்மூலம் இரண்டு ஆண்டுகளில் இரு கட்சிகளுக்கும் வழங்கிய மொத்த நன்கொடை ரூ.370 கோடியாக உயர்ந்துள்ளது. டைகர் அசோசியேட்ஸ் நிறுவனமும் மார்ட்டினின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனமும் தனித்தனி நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைய வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி விருப்பம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com