Pakistan Earthquake: பாகிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
Pakistan Earthquake: பாகிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Published on: October 17, 2026 at 6:32 pm
இஸ்லாமாபாத், அக்.17, 2026: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று (அக்டோபர் 17) காலை 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10.07 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பலுசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தார் (Khuzdar) நகரத்திலிருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் அப்பகுதியில் உணரப்பட்ட நிலையில், மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும், முதற்கட்ட தகவல்களின்படி உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
பாகிஸ்தான் நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. அரேபிய, யூரேசிய மற்றும் இந்திய நிலத்தட்டுகளின் சந்திப்புப் பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இதையும் படிங்க : ஃபேஸ்புக் கருத்தால் மரண தண்டனை.. இலங்கைத் தமிழரின் தண்டனையை ரத்து செய்த சவுதி நீதிமன்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com