நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை? 11 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை!

Nagercoil Prison Murder Case: நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக 11 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Published on: October 15, 2026 at 1:53 pm

Updated on: October 15, 2026 at 1:54 pm

கன்னியாகுமரி, அக்.15, 2026: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்டச் சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பெட்டிக்கடைக்காரர் சபரிவர்மன் மரணம் தொடர்பாக, சிறைக் காவலர்கள் மற்றும் சக கைதிகள் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். 34 வயதான சபரிவர்மன், சுசீந்திரம் அருகே ஈத்தங்காடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9ஆம் தேதி தென்தாமரைக்குளம் போலீசார் அவரைக் கைது செய்து நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சிறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

சிபிசிஐடி விசாரணையின்படி, சம்பவத்தன்று இரவு சிறையில் சபரிவர்மன் சத்தமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறைக் காவலர்கள் மற்றும் சக கைதிகள் அவரைத் தாக்கியதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கைகள் மற்றும் கால்களை அவர் வைத்திருந்த லுங்கியைக் கிழித்துக் கட்டி, மீண்டும் மீண்டும் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த சபரிவர்மன், இறுக்கமாகக் கட்டப்பட்டதால் மூச்சுத்திணறலுக்கும் ஆளாகி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலை வழக்கமான கைதிகள் எண்ணிக்கையின்போது அவர் அசைவற்ற நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டது. பிரேதப் பரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கைகளும், தாக்குதலால் ஏற்பட்ட காயங்களும் மூச்சுத்திணறலும் மரணத்துக்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தியதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் மூன்று சிறைப் பணியாளர்கள் மற்றும் எட்டு சக கைதிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைக் காவலர்களான ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் மற்றும் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய எட்டு கைதிகள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். நாகர்கோவில் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அக்டோபர் 12ஆம் தேதி சிபிசிஐடி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. மேலும், சம்பவம் நடந்த நாளின் மாலை முதல் மறுநாள் காலை வரையிலான ஆறு கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளையும் விசாரணைக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை அடுத்தகட்டமாக நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : உடன்குடி அனல் மின் நிலையம் 3,200 மெகாவாட் ஆக விரிவாக்கம் – தமிழக அரசு திட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com