Udangudi Power Plant Expansion: உடன்குடி அனல் மின் நிலையத்தை 3,200 மெகாவாட் ஆக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Udangudi Power Plant Expansion: உடன்குடி அனல் மின் நிலையத்தை 3,200 மெகாவாட் ஆக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Published on: October 15, 2026 at 12:16 pm
சென்னை, அக்.15, 2026: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைந்துள்ள அனல் மின் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் மின் உற்பத்தித் திறனை 2,640 மெகாவாட்டிலிருந்து 3,200 மெகாவாட்டாக உயர்த்தத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TNPGCL) ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்டத்திலும் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு நிலக்கரி அடிப்படையிலான அதிநவீன அனல் மின் அலகுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட நிர்வாக நடவடிக்கைகளின்படி, முன்பு ஒவ்வொரு கட்டத்திலும் 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அவற்றின் திறன் தலா 800 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சுமார் 6 முதல் 7 ஆண்டுகள் ஆகலாம் என மின்துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டங்கள் அரசு–தனியார் பங்களிப்பு (PPP) முறையில் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், ஆய்வுகள் மேற்கொள்ளுதல், சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுதல், ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆலோசகரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உடன்குடி முதல் கட்டத்தில் கூடுதலாக 800 மெகாவாட் அலகு அமைப்பதற்கான திட்டமும் இந்தப் பணிகளில் இடம்பெறுகிறது.
மாநிலத்தில் மின்வெட்டைத் தவிர்த்து மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மின்சாரத்தை வெளியில் இருந்து வாங்குவதற்கு நாளொன்றுக்கு கூடுதலாக ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை செலவிடப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்வெட்டால் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சென்னையில் ரூ.3,109 கோடியில் குடிநீர் திட்டம்.. முதலமைச்சர் விஜய் அடிக்கல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com