‘SK27’ படத்தில் சாய் அபயங்கர் இசை.. உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: ‘SK27’ படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்; இது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உற்சாகத்தை வழங்கியுள்ளது.

Published on: October 15, 2026 at 11:24 am

சென்னை, அக்.15, 2026: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படமான ‘SK27’-க்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்ததை வரவேற்று, சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளப் பதிவில், “தம்பி! உங்களை இப்படத்தில் இணைத்துக்கொள்வதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறது. உங்கள் இசையுடன் முதல் நாள் முதல் காட்சி அனல் பறக்கப் போகிறது” என்று தெரிவித்துள்ளார். இருவரும் முதன்முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் இசை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்குப் பதிலளித்த சாய் அபயங்கர், சிவகார்த்திகேயனின் படங்களின் முதல் நாள் முதல் காட்சியைத் தான் ஒருபோதும் தவறவிட்டதில்லை என்றும், தற்போது அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். ஒளிப்பதிவை ஓம் பிரகாஷும், படத்தொகுப்பை கலைவாணனும் கவனிக்கின்றனர். படத்தின் முழுத் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க : நடிகை சினேகாவுக்கு அன்பு மழை பொழிந்த நடிகர் பிரசன்னா.. என்ன சொன்னார் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com