மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாகும் வாக்குப்பதிவு… காலை 11 மணி நிலவரம் என்ன?

BYPOLL VOTING : மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 35.55%, தாராபுரத்தில் 37.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Published on: October 6, 2026 at 12:31 pm

சென்னை, அக். 6. 2026: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக். 6) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுராந்தகத்தில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரத்தில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,04,926 ஆண்கள், 1,08,797 பெண்கள், 65 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தாராபுரம் தொகுதியில் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,07,285 ஆண்கள், 1,16,013 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 27 வேட்பாளர்களும், தாராபுரத்தில் தவெக சார்பில் பி.சத்தியபாமா, திமுக சார்பில் சௌ.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

காலை 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 35.55%, தாராபுரத்தில் 37.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.தவெக வேட்பாளர் சத்தியபாமா தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். இதனிடையே, மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனில் கருப்பு மை இருந்ததால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும், 109-வது வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிலவரம் மற்றும் இறுதி முடிவுகள் மீது அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் மெட்ரோ பயணம்! சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாகும் வாக்குப்பதிவு… காலை 11 மணி நிலவரம் என்ன? BYPOLL VOTING

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாகும் வாக்குப்பதிவு… காலை 11 மணி நிலவரம் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com