117 பந்துகளில் அதிவேக இரட்டை சதம்.. புதிய சாதனை படைத்த சுப்மன் கில்!

Shubman Gill: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Published on: October 1, 2026 at 4:49 pm

கவுகாத்தி, அக்.1, 2026: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கவுகாத்தியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், 117 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டிய கில், ஆட்டமிழக்காமல் 133 பந்துகளில் 223 ரன்கள் குவித்தார்.

406 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி 39 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரோஹித் சர்மா 101 ரன்களும், கில் 223 ரன்களும் சேர்த்து முதல் விக்கெட்டுக்கு 251 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.

சுப்மன் கில்லின் அதிரடி இன்னிங்ஸில் 26 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் இடம்பெற்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 110 ரன்கள் எடுத்திருந்த கில், தொடர்ந்து 2-வது சதத்தையும் பதிவு செய்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 11-வது சதமாகும்.

இதற்கு முன்பு இந்திய வீரர் இஷான் கிஷன், 2022-ல் வங்கதேசத்துக்கு எதிராக 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து, அதிவேக இரட்டை சதம் அடித்த வீரராக இருந்தார். சிட்டகாங்கில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இஷான் 131 பந்துகளில் 210 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 24 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் இடம்பெற்றன.

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயிலும் இந்த சாதனைப் பட்டியலில் இடம்பெறுகிறார். 2015 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கான்பெர்ராவில் விளையாடிய கெய்ல், 138 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். அந்தப் போட்டியில் 147 பந்துகளில் 215 ரன்கள் எடுத்த அவர், 10 பவுண்டரிகளும் 16 சிக்ஸர்களும் விளாசினார்.

இதையும் படிங்க : மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக சதம் அடித்த ரோகித் சர்மா.. துள்ளிக் குதித்து கொண்டாட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com