மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி.. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு உண்டா?

Yashasvi Jaiswal: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இந்தப் போட்டியில்…

Published on: September 27, 2026 at 12:07 pm

புதுடெல்லி, செப்.27, 2026: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கேரளாவில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடனடியாக ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாகியுள்ளது. சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி வரும் நிலையில், அதே கூட்டணியே தொடரும் என இந்திய அணி நிர்வாகத்தின் கருத்துகளில் இருந்து தெரிய வருகிறது.

ஒவ்வொரு ஒருநாள் தொடரிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறுவது குறித்து விவாதம் எழுவது வழக்கமாகியுள்ளது. ஒருநாள் போட்டிகளிலும் அவர் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரோஹித் சர்மா தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், தற்போதைய சூழலில் ஜெய்ஸ்வால் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் கடைசியாக விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் அவர் சதமும் அடித்திருந்தார்.

ஜெய்ஸ்வாலின் வாய்ப்பு குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அணியில் இடம்பிடிப்பதற்கான போட்டி மிகவும் அதிகமாக இருப்பதாகவும், பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். ஜெய்ஸ்வால் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்றும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு முறையும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கோடக் தெரிவித்தார். இதன் காரணமாகவே அவர் அணியின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அணியின் ஆதரவுக் குழுவினர் ஜெய்ஸ்வாலின் திறமை, பயிற்சி மற்றும் மனநிலையை தொடர்ந்து கவனித்து வருவதாக கோடக் கூறினார். தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் அவருடன் தொடர்ந்து பேசுவதாக அவர் தெரிவித்தார். அணியில் ஒரே இடத்திற்கு பல திறமையான வீரர்கள் போட்டியிடும் சூழல் இருப்பதாகவும், உதாரணமாக மூன்று சிறந்த விக்கெட் கீப்பர்கள் இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே ஆடும் அணியில் தேர்வு செய்ய முடியும் என்றும் கோடக் விளக்கினார்.

ஜெய்ஸ்வாலுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்றும், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்றும் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். இதுவரை அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால், முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கும் பட்சத்தில், ஜெய்ஸ்வால் தனது வாய்ப்புக்காக தொடர்ந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்தில் கவனம் ஈர்த்த தமிழ்நாட்டின் சாய் கிஷோர்.. இந்திய அணியில் இடம் பெறவில்லை ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com