ரூ.46 கோடி காசோலை புகார்.. விசாரணைக்கு ஆஜரான நடிகை ராதா!

Actress Radha Appears for Inquiry : தனது அக்காவும் நடிகையுமான அம்பிகா மீது நடிகை ராதா ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தெரிவித்திருந்தார்.

Published on: September 25, 2026 at 5:43 pm

சென்னை, செப்.25, 2026: நடிகை அம்பிகா மீது ரூ.49 கோடி காசோலை தொடர்பாக புகார் அளித்திருந்த நடிகை ராதா, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகவில்லை.

1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 21-ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த ராதா, தனது வீட்டில் இருந்த கையெழுத்திட்ட 5 வெற்று காசோலைகளை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனன் பயன்படுத்தி சுமார் ரூ.49 கோடி பணத்தை அபகரிக்க முயன்றதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த புகார் குறித்து அம்பிகா விளக்கம் அளித்த நிலையில், புகாரின் உண்மைத்தன்மையை விசாரிக்க ராதாவிடம் நேரடியாக வாக்குமூலம் பெற மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக செப்.24-ஆம் தேதி ஆவணங்களுடன் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், ராதா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. வேறு ஒரு நாளில் நேரில் ஆஜராகி முழுமையான விளக்கம் அளிப்பதாக அவரது தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராதாவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின்னர், அம்பிகா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவது குறித்து போலீசார் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஜில்ஜில் ஆகப்போகும் 15 மாவட்டங்கள்.. உங்க பகுதி இருக்கா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com