தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
Published on: September 27, 2024 at 4:09 pm
Updated on: September 27, 2024 at 4:17 pm
M K Stalin met Narendra Modi in delhi | தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்று (செப்.27, 2024) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திப்பதற்காக நேற்று டெல்லிக்கு வந்தேன். இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தேன்.
இந்த சந்திப்பு, இனிய சந்திப்பாக அமைந்தது. பிரதமர் அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியுடன் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பு பயனுள்ள சந்திப்பாக மாற்ற வேண்டியது பிரதமரின் கைகளில்தான் உள்ளது” என்றார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
தொடர்ந்து, பேசிய மு.க. ஸ்டாலின், “ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று மூன்று முக்கியமான கோரிக்கைகளை நான் அவரிடத்தில் வலியுறுத்தி இருக்கிறேன்.
தலைப்புச் செய்திகளாக நான் சொன்னாலும், அதனுடைய டைய சாரம்சம் முழுமையாக, தெளிவாக எங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் எழுதி அவரிடத்தில் நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம். தலைப்புச் செய்திகளாக நானும் உங்களிடத்தில் சொல்ல விரும்புவது,
முதலில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியது போலவே, இரண்டாவது கட்டப் பணிகளையும் செயல்படுத்தவேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு.
இந்த இரண்டாவது கட்டப் பணிகள் காலதாமதமின்றி மேற்கொள்வதற்காக, 2019-ஆம் ஆண்டு, மாநில அரசின் நிதியிலிருந்தும், கடன் பெற்று பணிகளை துவக்கி, பின்பு ஒன்றிய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டமாக செயல்படுத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கை
தொடர்ந்து, “தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை, ஏற்கனவே தமிழ்நாடு அரசு செயல்படுத்திருக்கிறது. செயல்படுத்திக் கொண்டும் வருகிறது.
காலை உணவு திட்டம் போல, மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படாத பல முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
ஆனால், தேசியக் கல்விக் குழுவின் ஒரு விதிமுறையான மும்மொழிக் கொள்கையை பின்பற்ற தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த ஒரு மாநிலத்தின் மீதும், மொழித் திணிப்பு இருக்காது என்று தேசிய கல்விக் கொள்கை உறுதியளித்திருந்தாலும், இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதற்கான ஷரத்து இல்லை. எனவே, இந்த ஒப்பந்தம் திருத்தப்படவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் சொல்லிக் கொண்டு வருகிறோம்.
இந்தச் சூழ்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத காரணம் காட்டி, ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்ற சூழல் உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறோம். உடனடியாக இந்தத் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
மீனவர் பிரச்னை
இதையடுத்து, “மூன்றாவதாக, தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
நம்முடைய பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், மீன் பிடிக்கப் போகும் நம்முடைய மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து துன்புறுத்துகிறார்கள்.
இதுபற்றி பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் நான் பலமுறை வலியுறுத்தியும், கடிதம் எழுதியும், இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் மிக அதிக அளவு எண்ணிக்கையில், இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கிறது. 191 மீன்பிடிப் படகுகளும், 145 மீனவர்களும் தற்போது இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே, உடனடியாக நம்முடைய ஒன்றிய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தி, இந்த மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடிப் படகுகளையும் மீன்பிடிக் கருவிகளையும் உடனடியாக விடுவித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த மு.க ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com