தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
Published on: September 27, 2024 at 3:12 pm
M K Stalin in Delhi | 17 நாள்கள் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய மு.க. ஸ்டாலின், தற்போது டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அவர் கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.
அப்போது முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது, தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : சென்னையில் வக்பு சட்டதிருத்த மசோதா கருத்தரங்கம் : ஆ. ராசா பங்கேற்கிறார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com