அஜித் அகர்கர் பதவி விலக முடிவு.. ரோகித் சர்மா விவகாரம் காரணமா?

Ajit Agarkar: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலக அஜித் அகர்கர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, பிசிசிஐக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

Published on: September 19, 2026 at 1:11 pm

மும்பை, செப். 19, 2026: இந்திய கிரிக்கெட் அணியின் ஆடவர் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் முன்னாள் வீரர் அஜித் அகர்கர், தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் தலைமைத் தேர்வாளர் பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, புதிய தலைமைத் தேர்வாளரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை பி.சி.சி.ஐ தொடங்கியுள்ளது.

அகர்கரின் தற்போதைய பதவிக்காலம் அக்டோபர் 4ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கு முன்னதாகவே, கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ நிர்வாகத்துடன் நடைபெற்ற ஆலோசனையின்போது, தனது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு மாற்று நபரைத் தேடும் நடவடிக்கையை தொடங்குமாறு அவர் அறிவுறுத்தியதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் அதே முடிவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், தேர்வுக்குழு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அகர்கரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் உறுதியான தகவலை வெளியிடவில்லை. “இன்னும் 15 நாட்கள் உள்ளன. கிரிக்கெட் உலகில் அது நீண்ட காலம். உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் பொறுப்பேற்றார். விதிமுறைகளின்படி, அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும், தற்போதைய சூழலில் அவர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
குறிப்பாக, முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி எதிர்காலம் தொடர்பாக அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு கொண்டிருந்த கருத்துகளுக்கும் பிசிசிஐயின் நிலைப்பாட்டுக்கும் இடையே சமீபத்தில் வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்திலும் அகர்கர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் அகர்கரின் பதவி விலகல் முடிவு தொடர்பான தகவல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த தலைமைத் தேர்வாளரை நியமிப்பது குறித்து பிசிசிஐ விரைவில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 4ஆம் தேதி அவரது தற்போதைய பதவிக்காலம் முடிவடைவதால், அதற்குள் புதிய தலைமைத் தேர்வாளர் தொடர்பான நடைமுறைகளை வாரியம் நிறைவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் எதிர்கால வீரர் தேர்வு மற்றும் அணிக்கட்டமைப்பில் தேர்வுக்குழுவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில், அடுத்த தலைமைத் தேர்வாளர் யார் என்பது கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : வைபவ் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.. கௌதம் கம்பீர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com