கொலம்பியா நிலநடுக்கம்.. 132 பேர் உயிரிழப்பு.. 1,000 பேர் காயம்

Colombia Earthquake: கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 132 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தார்கள்; 1,000க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: August 11, 2026 at 1:24 pm

கொலம்பியா, ஆக.11, 2026: கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் திங்களன்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவுகோல் தீவிரத்தன்மை கொண்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 570-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கொலம்பிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கடுமையான நிலநடுக்கத்தால் 1,575 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ஆறு விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு சேதமடைந்ததால், வணிக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், ‘தேசியப் பேரிடர்’ நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொலம்பிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, காலை 7:34 மணிக்கு சோகோ மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மார் அருகே, 96 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் பரவலாக உணரப்பட்டதாகவும், பல்வேறு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

அரசு, பாதிக்கப்பட்ட மாகாணங்களின் நிர்வாகத் தலைமையகங்களுடன் இணைந்து செயல்பட்டு, சேதங்களை மதிப்பிடுவதும், அவசர நிவாரணத் தேவைகளை அடையாளம் காண்பதும் நடைபெற்று வருகிறது. உள்ளூர் மேயர்கள் மற்றும் அவர்களது குழுக்கள், மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த பேரிடரைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் கொலம்பியாவுக்கு ஆதரவு மற்றும் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். சர்வதேச உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இலங்கையில் ராஜபக்ச கூட்டாளி அதிரடி கைது.. என்ன காரணம்? அரசியல் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com