ப்ரோ ரிலாக்ஸ்.. மீண்டும் டேட்டிங் சர்ச்சையில் சிக்கிய ம்ருனால் தாக்கூர்.!

Mrunal Thakur dating controversy : பாலிவுட் நடிகை ம்ருனால் தாக்கூர், மீண்டும் டேட்டிங் சர்ச்சையில் சிக்கி உள்ளார்; இம்முறை யார் தெரியுமா?

Published on: August 9, 2026 at 1:25 pm

Updated on: August 9, 2026 at 1:31 pm

மும்பை ஆகஸ்ட் 9 2026; பாலிவுட் நடிகை ம்ருனால் தாக்கூர், கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடர்பு வைத்திருப்பதாக பரவிய வதந்திகளை கடுமையாக மறுத்துள்ளார். “Bro relax… show me ek sath kahan?” என்று சமூக ஊடகங்களில் நேரடியாக பதிலளித்து, ஒரே இடத்தில் காணப்பட்டதாலேயே காதல் வதந்தி உருவாகக் கூடாது எனக் கூறினார்.

மும்பை பாண்ட்ரா வெஸ்ட் பகுதியில் உள்ள ஒரு கஃபேவில், ம்ருனால் தாக்கூர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரே நேரத்தில் வெளியேறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்தக் காட்சியில் இருவரும் சேர்ந்து காணப்படவில்லை என்றாலும், ரசிகர்கள் “new couple in town” எனக் கூறி வதந்திகளை பரப்பினர். இதற்கு ம்ருனால் தாக்கூர், “நீங்கள் படித்தவர்கள், இப்படிப் பட்ட வதந்திகளை நம்புவது எப்படி?” என்று கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும், “நாட்டில் பல முக்கிய பிரச்சினைகள் நடக்கின்றன. Gen Z-இல் இருந்து கற்றுக்கொண்டு, உண்மையான பிரச்சினைகள் குறித்து வீடியோக்கள் செய்யுங்கள்; அதற்கு அதிக பார்வைகள் கிடைக்கும்” எனக் கூறி, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதன் மூலம், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வதந்திகளால் பாதிக்க விடமாட்டேன் என்ற உறுதியை வெளிப்படுத்தினார்.

முன்னதாக, ம்ருனால் தாக்கூர் தென்னிந்திய நடிகர் தனுஷுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், 2026 பிப்ரவரி 14 அன்று திருமணம் நடைபெறும் எனவும் வதந்திகள் பரவியிருந்தன. ஆனால் அந்த வதந்திகள் அனைத்தையும் அவர் சிரித்தபடி மறுத்தார். அதேபோல், கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் பாடகர் பாட்ஷா ஆகியோருடனும் அவரது பெயர் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்தவொரு உறவையும் அவர் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் முக்கிய இளம் திறமையான வீரராக விளங்குகிறார். அவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடியுள்ளார், மேலும் இலங்கை டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க உள்ளார்.

ம்ருனால் தாக்கூர், தனது புதிய திரைப்படமான பூஜா மேரி ஜான் மற்றும் தெலுங்கு படம் ராக்கா மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; ஓடிடியில் ‘இதயம் முரளி’.. அதர்வாவின் படத்தை எங்கே, எப்போது பார்க்கலாம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com