குஜராத்தில் கனமழை எச்சரிக்கை… 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Heavy rain warning for Gujarat: குஜராத்தின் 13 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 48 மணி நேரம் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: July 31, 2026 at 11:06 am

அகமதாபாத், ஜூலை 31, 2026: குஜராத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாநில நிர்வாகம் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று மத்திய மற்றும் தென் குஜராத்தைச் சேர்ந்த அகமதாபாத், ஆனந்த், சூரத், நவ்சாரி, வல்சாட் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

கனமழை முன்னெச்சரிக்கையாக அகமதாபாத், நவ்சாரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான மற்றும் வெள்ள அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு முகாம்களுக்கு உடனடியாக மாற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 1 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லக் கூடாது என வானிலை ஆய்வு மையம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அமித் ஷா எங்கே? தங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா? கார்கே ஆவேசம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com