தென் சீனக் கடலில் மூழ்கிய வியட்நாம் சரக்கு கப்பல்! 23 பேரை தேடும் பணி தீவிரம்

Cargo Ship Sinks: தென் சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த சரக்கு கப்பல் மூழ்கியதில் 23 பேர் மாயமாகியுள்ளனர். 39 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், சீனா மற்றும் வியட்நாம் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

Published on: July 26, 2026 at 5:49 pm

பெய்ஜிங், ஜூலை 26, 2026: தென் சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ (Khoi Nguyen 18) என்ற சரக்கு கப்பல் மூழ்கியதில், காணாமல் போன 23 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கப்பலில் மொத்தம் 62 பேர் இருந்த நிலையில், இதுவரை 39 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சீன அரசின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை மாலை யோங்ஷு ரீஃப் அருகே கப்பல் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணியளவில் கப்பலில் இருந்து அவசரகால சிக்னல் கிடைத்ததைத் தொடர்ந்து, உடனடியாக விரிவான மீட்புப் பணி தொடங்கப்பட்டது.

சீனாவின் 6 கப்பல்கள், ஒரு மீட்பு ஹெலிகாப்டர் மற்றும் வியட்நாமின் ஒரு கப்பல் ஆகியவை இணைந்து கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. ஹைனான் மாகாண அதிகாரிகள், மூழ்கிய கப்பல் சுமார் 70 மீட்டர் நீளம் கொண்ட வியட்நாம் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் என தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து, உரிமை தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வரும் தென் சீனக் கடலில் நிகழ்ந்துள்ளது. சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இந்தக் கடல் பகுதிக்கு உரிமை கோரி வருகின்றன. குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் நிறைந்ததாக கருதப்படும் ஸ்பிராட்லி தீவுகள் தொடர்பாக நீண்டகாலமாக பிராந்திய பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: சவுதி மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்! செங்கடல் பதற்றம் மீண்டும் தீவிரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com