8 HR&CE Staff Suspended: கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 8 பேரை தமிழ்நாடு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
8 HR&CE Staff Suspended: கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 8 பேரை தமிழ்நாடு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

Published on: July 26, 2026 at 5:01 pm
சென்னை, ஜூலை 26, 2026: கோயம்புத்தூரில் உள்ள அருள்மிகு கோணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது உண்டியல் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 8 பேரை தமிழ்நாடு அரசு இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளது. இந்த நடவடிக்கை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15-ஆம் தேதி, கோயம்புத்தூர் பெரிய கடை வீதியில் உள்ள கோணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணியின்போது, திட்டமிட்டு ஒரு உண்டியலை எடுத்துச் சென்றதாக உள்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டிக்கெட் விற்பனையாளர் பாலசுப்பிரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், கோவில் ஊழியர் பிரதீப் குமார் மற்றும் அர்ச்சகர் கிருஷ்ணராஜ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கண்காணிப்பில் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டின் பேரில் வட்ட ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார், செயல் அலுவலர் குமார் மற்றும் உதவி ஆணையர் உஷா நந்தினி ஆகிய நான்கு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
கோவில் நிர்வாகத்தில் எந்தவித முறைகேடும் அனுமதிக்கப்படாது என்றும், சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர்கள் மீதும், தங்கள் பொறுப்பை சரிவர நிறைவேற்றத் தவறிய அதிகாரிகள்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. துறை ரீதியான நடவடிக்கையுடன் குற்றவியல் விசாரணையும் இணைந்து நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ராஜினாமா மட்டும் போதாது, நீட் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.. அமைச்சர் நிர்மல்குமார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com