Berlin Pride Tragedy : ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற LGBTQ+ பிரைட் பேரணியில் மக்கள் கூட்டத்துக்குள் வேன் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் காயமடைந்தனர்
Berlin Pride Tragedy : ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற LGBTQ+ பிரைட் பேரணியில் மக்கள் கூட்டத்துக்குள் வேன் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் காயமடைந்தனர்

Published on: July 26, 2026 at 1:40 pm
பெர்லின், ஜூலை 26, 2026 : ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஆண்டு தோறும் நடைபெறும் LGBTQ+ பிரைட் (Christopher Street Day) பேரணியின் போது, மக்கள் கூட்டத்தின் மீது வேன் ஒன்று பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 15 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுக்கள் மற்றும் அவசர மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். பாதுகாப்பு காரணங்களால் பிரைட் பேரணியை காவல்துறை உடனடியாக நிறுத்தி வைத்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல்துறை சந்தேக நபராக அடையாளம் கண்டுள்ளது. பெர்லினில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத வட்டாரங்களுடன் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய LGBTQ+ நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே பேரணியில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டின் கொண்டாட்டம் வன்முறை சம்பவத்தால் சோகத்தில் முடிந்துள்ளது.
இதையும் படிங்க: தென் சீனக் கடலில் பதற்றம்: பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீன கடலோர காவல்படை தாக்குதல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com