NEET Protest: நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
NEET Protest: நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Published on: July 25, 2026 at 1:02 pm
சென்னை, ஜூலை 25 2026: நீட் தேர்வை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வு தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிகா, தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்; நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் பொறுப்புணர்ச்சியுடன் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்; ஒரு சீர்திருத்தக் கல்விக்காக நிற்கிறேன். தடையின்றி வெளிப்படையாக இருக்கும் ஜென்சி தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.
நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள் சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே மற்றும் சௌரவ் தாஸ், தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்; எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சி.ஜே.பி” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ராமாயண சீதைக்கு சுருள் முடி இல்லை.. சாய் பல்லவி கதாபாத்திரம் குறித்து டி.வி சீரியல் சீதை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com