Tuticorin: தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞர் அருணாசலம் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
Tuticorin: தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞர் அருணாசலம் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

Published on: July 23, 2026 at 4:02 pm
தூத்துக்குடி ஜூலை 23, 2026: தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞர் அருணாசலம், காவல் நிலைய சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றதாகக் கூறி ஜூலை 17 அன்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரது உறவினர்கள், விசாரணையின் போது நான்கு காவலர்கள் தாக்கியதால் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததால், மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “சந்தேகத்திற்குரிய காவலர்கள் கைது செய்யப்படும் வரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
காவல் துறை வட்டாரங்கள், கைது நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதாகவும், மருத்துவ பரிசோதனையில் வெளிப்புறக் காயங்கள் ஏதுமில்லை என சான்றளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தன. ஆனால், காவல் நிலையத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அருணாச்சலம், தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் காவல் துறை நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது
இதையும் படிங்க : தூத்துக்குடி விசாரணை கைதி உயிரிழப்பு.. அன்புமணி கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com