7 நாட்கள் கனமழை எச்சரிக்கை… எந்தெந்த மாநிலங்களுக்கு தெரியுமா?

IMD Alert : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான், கொங்கண் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.

Published on: July 22, 2026 at 11:29 am

புதுடெல்லி, ஜூலை 22 2026: தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) புதன்கிழமை (ஜூலை 22) தெரிவித்துள்ளது. குறிப்பாக குஜராத், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கொங்கண் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்த நிலை ஜூலை 27 வரை நீடிக்கக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, குஜராத், மகாராஷ்டிரா (கொங்கண் பகுதி), ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். இதனுடன் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை, இடியுடன் கூடிய மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் இமயமலை சார்ந்த மாநிலங்களில் திடீர் வெள்ளம் (Flash Flood) மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆறுகள், ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், மலைப்பகுதிகளுக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் நிர்வாகங்கள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க கொலை செய்யப்பட்ட இரு சாதுக்கள்.. ஹரித்வார் கோவில் அருகே புதைப்பு.. பகீர் சம்பவம்!

டெல்லி போராட்டத்தில் காயம்.. ஜெ.பி நட்டா, ராகுல் காந்தி சந்திப்பு.. சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்? CJP Protest

டெல்லி போராட்டத்தில் காயம்.. ஜெ.பி நட்டா, ராகுல் காந்தி சந்திப்பு.. சோனம் வாங்சுக்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com