26 முக்கிய வழக்குகளை தீர்க்க உதவிய மோப்பநாய் ‘மோக்கா’ வீரமரணம்… 24 குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை

Moka Tribute: நீலகிரி மாவட்ட காவல்துறையின் மோப்பநாயான ‘மோக்கா’, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.

Published on: July 18, 2026 at 8:48 pm

நீலகிரி, ஜூலை 18 2026: நீலகிரி மாவட்ட காவல்துறையில் மோப்பநாயாக பணியாற்றிய ‘மோக்கா’, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது. குற்றவாளிகளை கண்டறியும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மோக்கா, தனது சேவைக்காலத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 26 முக்கிய குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க காவல்துறைக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளது.

மோக்காவின் மறைவைத் தொடர்ந்து, ஊட்டியில் உள்ள காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. மூத்த காவல் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், காவல்துறை மரபுப்படி 26 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

காவல்துறையின் விசாரணைப் பணிகளில் மோப்பநாய்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் மோக்கா பல ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காணவும், தடயங்களை கண்டுபிடிக்கவும் சிறப்பாக செயல்பட்டு காவல்துறையின் பாராட்டைப் பெற்றிருந்தது.

காவல்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மோக்காவின் மறைவு, நீலகிரி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாடு பயணம்.. அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு நோட்டீஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com