சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை கைவிட செய்யுங்கள்.. பாடகி சின்மயி கோரிக்கை

Chinmayi: யாராஞ்சும் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை கைவிட செய்யுங்கள் என பாடகி சின்மயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published on: July 16, 2026 at 3:13 pm

சென்னை, ஜூலை 16, 2026: டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், பாடகி சின்மயி ஸ்ரீபாதா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “தயவுசெய்து யாராவது திரு. வாங்சுக்கை அவரது உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சின்மயி, தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் நீட் மறுதேர்வுகள் காரணமாக ஏற்கனவே சோர்வடைந்துள்ள நீட் தேர்வு மாணவர்களின் சிந்தனையில் சோனம் வாங்சுக் இல்லை. “அவர் இறுதிவரை உண்ணாவிரதம் இருந்தாலும் அரசாங்கம் அதைப் பற்றிக் கவலைப்படாது” என்றும் அவர் எழுதியுள்ளார்.

மேலும், “எனது நாடு ஆழ்ந்த ஊழல்வாதிகளாலும் மனசாட்சியே இல்லாதவர்களாலும் நிர்வகிக்கப்படுகிறது. இவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்களைப் போலவே மிகவும் இழிவானவர்கள். இங்கு ஒவ்வொரு நாளும் ‘தர்மம்’ என்ற சொல் பேசப்படுகிறது,” என்று சின்மயி தனது பதிவில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், “கயவர்களின் கைகளில் சிக்கியுள்ள எவ்வளவு அழகான நாடு இது. கடவுளே என் நாட்டைக் காப்பாற்று,” என்று உணர்ச்சியுடன் எழுதியுள்ளார். சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் நிலையில், சின்மயியின் இந்த வேண்டுகோள் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க :தெலுங்கில் முதல் படம்.. வாரணாசி குறித்து பிரியங்கா சோப்ரா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com