தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர்.. மத்திய அமைச்சர் எல். முருகன்

L Murugan On Kamaraj : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

Published on: July 15, 2026 at 5:31 pm

சென்னை, ஜூலை 15, 2026: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனது பெரும் பங்களிப்பைச் செய்தவருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று நினைவுகூரப்படுகிறது. எளிமை, நேர்மை, மக்கள் நலன் ஆகியவற்றை அரசியல் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட அவர், தமிழகத்தின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் மறக்க முடியாத பங்களிப்பைச் செய்தார்.

தேசத்தை முன்னேற்றக் கூடிய ஒரே சக்தி கல்வி என்பதை பெரிதும் நம்பிய காமராஜர், எளிய மக்களின் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியதோடு, ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை வழங்கியது. இதற்காக அவர் “கல்விக்கண் திறந்த கர்மவீரர்” என அன்போடு அழைக்கப்படுகிறார்.

அவரது அரசியல் வாழ்க்கை முழுவதும் மக்கள் நலனே முதன்மை எனக் கருதி செயல்பட்டார். எளிமையின் சின்னமாக போற்றப்படும் காமராஜர், தனது இறுதிக்காலம் வரை பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணித்தார். தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் அவர் அமைத்த அடித்தளங்கள், இன்றும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகின்றன.

மத்திய அமைச்சர் எல். முருகன், காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனது பெரும் பங்களிப்பை நல்கியவருமான அய்யா காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

தேசத்தை முன்னேற்றக் கூடிய ஒரே சக்தி கல்வி என்பதை பெரிதும் நம்பிய அய்யா காமராஜர் அவர்கள், எளிய மக்களின் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டுமென்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்து பெரும் புரட்சி செய்தார். இதற்காக, ‘கல்விக்கண் திறந்த கர்மவீரர்’ என்று நம்மால் அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழகம் இன்று அடைந்திருக்கும் பல்வேறு வளர்ச்சிக்கு அடிகோலியவர் அய்யா காமராஜர் அவர்கள்.

தனது இறுதிக்காலம் வரை மக்கள் நலனே முதன்மையானது என்று வாழ்ந்தவர், அரசியலில் எளிமையின் சின்னமாக போற்றப்படுகிறார். அய்யா காமராஜர் அவர்களின் இன்றைய பிறந்த தினத்தில், அவரது தியாகங்களையும் அர்ப்பணிப்பு உணர்வுகளையும் என்றென்றும் போற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நாகர்கோவில் சிறை மரண வழக்கு… சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com