“பணியிடை நீக்கம் மட்டும் போதாது”… சபரிவர்மன் உயிரிழப்பு குறித்து பிரேமலதா கண்டனம்

LOCKUP DEATH: சாமிதோப்பு அருகே கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறையில் உயிரிழந்த சம்பவத்தில், 3 போலீசாரை பணியிடை நீக்கம் செய்தது மட்டுமே போதுமான நடவடிக்கை அல்ல என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Published on: July 15, 2026 at 2:16 pm

சென்னை, ஜூலை 15, 2026: சாமிதோப்பு அருகே குட்கா புகையிலைப் பொருட்கள் விற்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கவலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மரணத்தின் உண்மை நிலை முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது என்றும், இந்த விவகாரம் தீவிரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஆரம்ப நடவடிக்கையாக இருந்தாலும், “பணியிடை நீக்கம் மட்டுமே தீர்வாகாது” என்று அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் இனி எந்த இடத்திலும் லாக்கப் மரணங்கள் அல்லது காவல் பாதுகாப்பில் உயிரிழப்புகள் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவலில் உள்ளவர்களின் உயிர் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 124-வது பிறந்தநாள்: பெருந்தலைவர் காமராஜருக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com