STALIN ON KAMARAJ: பெருந்தலைவர் காமராசரின் 124-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழ்வணக்கம் செலுத்தினார்.
STALIN ON KAMARAJ: பெருந்தலைவர் காமராசரின் 124-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழ்வணக்கம் செலுத்தினார்.

Published on: July 15, 2026 at 12:01 pm
சென்னை, ஜூலை 15 2026: பெருந்தலைவர் காமராசரின் 124-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர் என்று தெரவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
— M.K.Stalin (@mkstalin) July 15, 2026
மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.… pic.twitter.com/cknQXON7Fv
உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர். காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவரது வழியிலான நமது திராவிட மாடல் அரசிலும், காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை, திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர் எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!
தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க 124-வது பிறந்தநாள்: பெருந்தலைவர் காமராஜருக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com