விம்பிள்டனில் இரு ஜாம்பவான்கள்.. சச்சின் – ஃபெடரர் சந்திப்பு!

Sachin–Federer Meet: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் மீண்டும் சந்தித்தனர்.

Published on: July 12, 2026 at 2:22 pm

லண்டன், ஜூலை 12, 2026: இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக ராயல் பாக்ஸில் கலந்து கொண்டார். அப்போது, சுவிட்சர்லாந்தின் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரரையும் அவர் சந்தித்தார்.

சந்திப்புக்குப் பிறகு சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் சச்சின் பகிர்ந்த பதிவில், “சில ராலிகள் ஒருபோதும் முடிவதில்லை. நம்முடைய நட்பும் அப்படித்தான். உங்களுடன் நேரம் செலவிட்டது எப்போதும் மகிழ்ச்சி, ரோஜர். மீண்டும் சந்திக்கும் வரை…” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் உலகின் இரு ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஜர் ஃபெடரர் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பைப் பகிர்ந்து வருகின்றனர். விம்பிள்டனில் அவர்கள் மீண்டும் ஒன்றாக தோன்றிய தருணம் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

பல முன்னாள் மற்றும் தற்போதைய விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் இரு விளையாட்டு ஜாம்பவான்களின் நட்பை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க இங்கிலாந்து டி-20 கிரிக்கெட் தொடர்.. தவறு நடந்தது எங்கே? கையை பிசையும் ஷ்ரேயாஸ் ஐயர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com