Anbumani Raises Caste Census Concern : சாதிவாரி கணக்கெடுப்பு நோக்கமே சிதைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Raises Caste Census Concern : சாதிவாரி கணக்கெடுப்பு நோக்கமே சிதைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: July 8, 2026 at 12:15 pm
சென்னை, ஜூலை 8, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் 16 மாநிலங்களில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட ஆய்வில், சாதிகளை குறிப்பிடுவதற்கான இடம் காலியாக விடப்பட்டு, அதில் சாதியின் பெயரை எழுதும் முறை கடைபிடிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. தோல்வியடைந்த இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமே சிதைக்கப்பட்டு விடக்கூடும்” என எச்சரித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், ஒரு மாநிலத்தில் அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது குழப்பத்தை விளைவிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கமே, ஒவ்வொரு சமூகத்தின் மக்கள்தொகை விவரங்களைக் கண்டறிந்து, அவர்களின் சமூக, பொருளாதார சூழல்களுக்கு ஏற்ற வகையில் சமூகநீதி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது தான். மாறாக, குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், சாதி விவரங்கள் பதிவு செய்யப்பட்டால், அது சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கத்தையே சிதைத்து விடும். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக மக்களை எண்ணும் பணி நடைபெறும் போது, அரசின் சாதிகள் பட்டியலைக் காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை பதிவு செய்யும் முறையை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கடைபிடிக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : மேகதாது அணை விவகாரம்.. தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா? காங்கிரஸூக்கு பா.ஜ.க கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com